Skip to main content

லூனா - 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது!

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

Luna - 25 spaceship incident

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா சார்பில் அனுப்பப்பட்ட லூனா - 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது.

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா சார்பில் சுமார் ரூ. 1662 கோடி மதிப்பீட்டில் கடந்த 10 ஆம் தேதி லூனா - 25 என்ற விண்கலம் ஏவப்பட்டது. இதையடுத்து லூனா - 25 விண்கலம் தொடர்பை இழந்த நிலையில் மீண்டும் இனைப்பை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. உந்து விசை அமைப்பில் மாற்றம் செய்தபோது ஏற்பட்ட விலகல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் லூனா - 25 விண்கலம் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பபட்ட லூனா - 25 விண்கல திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்