Skip to main content

'யார் கண்ணு பட்டுச்சோ' - காதலர்களைத் தாக்கும் புதிய வகை நோய்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
'100 phone calls...'- New disease to hit Chinese lovers

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் தற்போது மக்கள் தொகை முதல் முறையாக குறைந்துள்ளது. இது தொடர்பாக அண்மையில் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் செய்தியால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று வெளியுலகத்திற்கு வந்துள்ளது. சீனாவில் காதலி ஒருவர் தன்னுடைய காதலருக்கு 100க்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

குறிப்பாக வல்லவன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ரீமாசென் தொடர்ந்து போன் செய்து டாக்சிக் கொடுக்கும் காட்சியைப் போன்று உண்மையான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷியாஹு என்ற 18 வயது பெண் ஒருவர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளைஞரும் அவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் மற்ற காதலர்களைப் போலவே செல்போனில் பேசுவது பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் ஷியாஹுவிற்கு இளைஞர் மீதான காதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அவர் தன்னை சார்ந்து இருக்க வேண்டும்; தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்த ஷியாஹு தொடர்ந்து தொலைபேசி மூலம் அவரை அழைத்துள்ளார். இதில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட முறை போன் செய்து காதலனிடம் விசாரிப்பது போன்ற செயல்கள் அந்த இளைஞருக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

அன்றாட செயல்களைக்கூட செய்ய முடியாத அளவுக்கு அடிக்கடி போன் வருவது குறித்து அப்பெண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இருப்பினும் விடாத அப்பெண் 100க்கும் மேற்பட்ட முறை அவருக்கு போன் செய்துள்ளார். போனை எடுக்காததால் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார். இதனையடுத்து இளைஞரின் புகாரின் பேரில் அப்பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மருத்துவர் ரீதியாக பாதிக்கப்பட்டதை அறிந்து மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு செய்த ஆய்வில் அவர் 'லவ் பிரைன் டிஸார்டர்' என்ற புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தைவான் அதிபரின் வாழ்த்துக்குப் பதிலளித்த மோடி; எதிர்க்கும் சீனா!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Opposing China for Modi responded to Taiwan President's greeting

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். 

மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தைவான் அதிபர் லாய் சிங்-டே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தல் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். 

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்கள் அன்பான வாழ்த்து செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது, நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்.’ என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பதிலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “தைவான் பிராந்திய அதிகாரிகள் மற்றும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது. உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. ‘ஒரே சீனா கொள்கை’ தொடர்பாக, இந்தியா தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளை செய்துள்ளது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

இந்தியா - சீனா போர்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Mani Shankar Aiyar is in controversy again for speech about china

ஒவ்வொரு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி ஏழாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதிக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகியிருந்த நிலையில், தற்போது சீனா குறித்த கருத்து மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. 

டெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘1962ஆம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா மோதலை சீனா படையெடுப்பு’ என்று குறிப்பிட்டார். மணிசங்கர் அய்யரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்தியாவின் வரலாற்றை மணிசங்கர் அய்யர் திரித்துக் கூறுவதாக பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மணிசங்கர் அய்யர் கருத்தில் இருந்து காங்கிரஸ் விலகிக் கொள்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

அந்த வகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “மணிசங்கர் அய்யர், ‘குற்றம் சாட்டப்பட்ட படையெடுப்பு’ என்ற சொல்லை தவறாகப் பயன்படுத்தியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டார். அவரது வயதுக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ், அவரின் கருத்தில் இருந்து விலகி கொள்கிறது” என்று கூறி கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் சீனா ஊடுருவியது தொடர்பாக பிரதமர் மோடி மீது ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்தார்.