ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வகையில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாயின. காடுகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மிருகங்கள் பலியாகின. வனங்களில் உள்ள மருத்து குணம் கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள் ஆகியவை கூண்டோடு அழிந்தன. இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த கங்காரு ஒன்றின் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை உறைய வைக்கும் வகையில் அமைத்திருந்தது. மேலும், இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
காட்டுத்தீ அதிகமாக உள்ள இடங்களில் மிதமான அளவு மழை பெய்து வருவதாக அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் காட்டுத்தீயை விரைவில் முழுவதுமாக அணைத்து விடலாம் என்று ஆஸ்திரேலிய அரசு நம்பிக்கை தெரிவித்த நிலையில், தற்போது வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்று என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் காற்று மாசுபாடு வரலாறு காணாத வகையில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.