Skip to main content

பருவநிலை மாற்றம் - ஆசிய நாடுகளை தாக்கும் ட்ரம்ப்

Published on 15/11/2019 | Edited on 16/11/2019

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றில் பேசும்போது இந்தியா ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடலில் குப்பைகளைக் கலப்பதாக கூறியுள்ளார். அவரது பேசும்போது  " உலக மக்கள் அனைவருக்கும் தூய்மையான காற்று, நீர் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் எங்களிடம் இருப்பது அமெரிக்கா எனும் ஒரு சிறிய பகுதி. இதையே நீங்கள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கேட்டால் சரியாக இருக்கும்.
 

fk



இந்த நாடுகள் தூய்மையான காற்று மற்றும் நீரைக் கொடுப்பதற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால் இவை தங்கள் குப்பைகளைக் கடலில் கொட்டுகின்றன.  அது மிதந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை வருகிறது" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்