gg

(274) பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு!

போன இதழ்ல "புதுசா ஐட்டம் ஒண்ணு இருக்கு'ன்னு சொன்னேன்ல, அது வேற ஒண்ணு மில்ல... நாம நடப்பு ஆட்சியையோ, யாரையும் பழி சொல்லல. அதேநேரம்... நம்மள அழிக்க நெனைச்ச, நம்மள உருத்தெரியாம ஓட வைக்கணும்னு நெனைச்ச, கலைஞர அழியாத பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, பெரிய அபாண்டத்துக்குள்ள சிக்க வைக்க, "ராஜ்குமார்ங்கிறவர காப்பாத்தலன்னா... அங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற நம்ம தமிழ் இனம் 1 லட்சம் பேர கொல்லுவேன்'னு ஒரு இரவு நேரத்துல கன்னட வெறியன்க சொல்றாய்ங்க. அப்படியான ஒரு தகதகப்பு இருந்த ஒரு மிஷன். அந்த மிஷன்ல நான் போகமாட்டேன்னு சொல்லியும், குத்தூசி ஐயாவோட வேண்டுகோள்... நாம போறோம்னு சொன்னா 1 லட்சம் பேரு உசுர காப்பாத்துறோம். 1 லட்சம் பேர காப்பாத்துறதுங்கிறது சாதாரண விஷயமே இல்ல!

இப்ப வேணும்னா அந்த தாக்கம் பெருசா தெரியாம இருக்கலாம். ஆனா அன்னிக்கு... யோசிச்சுப் பாருங்க; அப்படி ஒரு அபாயம்! ராஜ்குமார மீட்கறதுக்கு தமிழ்நாடு, கர்நாடகா ரெண்டு அரசும் சேர்ந்து என்ன தூது அனுப்பி, எப்படியாவது ரெண்டு மாநிலத்துலயும் எந்த உயிர்ச் சேதமும் வராம காப்பாத்த பெரும்பாடு பட்டுச்சு. இப்ப நாயி, பேயி எல்லாம் நான்... நான்...னு அலையுது. ஆனா, இந்த மீட்பு வெற்றிபெறக் கூடாது, இந்த மீட்பு சக்சஸ் ஆகக்கூடாது, நாசமாப் போயிறணும். இதுல நான் செத்துறணும்னு நெறையபேர் கங்கணம் கட்டித் திரிஞ்சானுக. ஏன்... கூட இருந்த படுபாவியே எதிர்பார்த்தான்னு இப்பதான் தெரியுது. இருக்கட்டும்... இருக்கட்டும்...! அதுக்காக எனக்கே தெரியாம என் சூ....க்குப் பின்னாடி பெரிய அளவுல எதிரா ஒர்க் பண்ணுனான் படுபாவி.

Advertisment

மகராசி ஜெயலலிதா இருக்கே... அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க? நடிகர் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்துன்னா நம்ம தமிழ் ஆளுங்க லட்சம் பேருக்கு மேல செத்துருவாங்கன்னு தெரிஞ்சும், கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இல்லாம நம்மள காவு வாங்கி, கலைஞர் இடத்த காலி பண்ணணும்னுதான் கொம்பு சீவுனாங்க. அப்பேர்ப்பட்ட அந்த ஜெயலலிதாவுக்கு கைப்பாவையா இருந்தவர்தான் இந்த தேவாரம்.

நான் அடிக்கடி சொல்லுவேன் பாருங்க... "பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு'ன்னு.

"பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு' அப்படின்னா... தேவாரம் "தி.மு.க. எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு' ரெண்டையும் உள்ள வச்சுக்கிட்டு நல்லவனாட்டம் முகமூடிய போட்டுக்கிட்டு காவல்துறையில இருந்தாரு. அவரு ஒரு புத்தகம் எழுதியிருக்காரு. அதுல இருக்கிற மூணு வரிய போட்டுத்தான் போன இதழ்ல நாம கடைசியா முடிச்சிருப்போம்.

Advertisment

oo

"பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் தேவாரம் அவர்களின் கருத்துக்கு மட்டுமே மதிப்பளித்து...' அப்படீன்னு ஒரு மூணு லைன் எழுதியிருக்கேன்ல. இந்த மூணு லைன்... அவரு அதான்... வால்டர் ஐ.தேவாரம் "மூணாறிலிருந்து மெரினா வரை'ன்னு ஒரு புத்தகம் எழுதியிருக்காரு.

"ஏய்யா இந்த நேரம் இது நமக்குத் தேவையா?' அப்படீன்னு டவுட் வரும்.

"நீ போர்க்களம் நடத்துற. இந்நேரம் இது எதுக்கு? தேவாரம்… தாவாரம்… இவங்கள்லாம் எழுதுன புத்தகம் நமக்கு எதுக்கு?' அப்படீன்னு கேக்குறீங்க.

இப்பதான் பாயின்டுக்கு வர்றேன். இப்படி ஒரு புத்தகம் வந்திருக்குன்னு என் தம்பி ராஜா, திருவண்ணாமலையில நிருபரா இருக்காரு. அவரு நக்கீரன் செய்தி விஷயமா ஒரு ஊருக்குப் போயிருக் கிறாரு. அப்போ அங்க போலீஸ் கேன்டீன்ல இந்த புக் விக்குதுன்னு அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. அத அவரு என்கிட்ட சொன்னாரு.

நான் உடனே பதறிப்போய், "போலீஸ் கேன்டீன்ல புக் விக்கிறாங்களா... விக்கமாட் டாங்களே''ன்னேன்.

"இல்லண்ணே... விக்கிறாங்க. அது வேற யாரோடதும் இல்ல... அது தேவாரம் எழுதுன புத்தகம்.''

"தேவாரம் எழுதுன புத்தகமா... அவரு எப்ப எழுதுனாரு?''

"அண்ணே... 10 நாளைக்கு முன்னாடி வந்தி ருக்கு. இது கேன்டீன்ல மட்டும்தான் கிடைக்கும்''

"போலீஸ் கேன்டீன் யார் நடத்துறா? போலீஸ்தான் நடத்துது. ராணுவத்துக்கு தனியா கேன்டீன் இருக்கிற மாதிரி போலீஸுக்கும் தனியா கேன்டீன் இருக்கு. இது கலைஞர் கொண்டுவந்ததுதான். அதுல தேவாரம் புக் எப்படி?''ன்னு நான் கேக்குறேன்.

"ஆமாண்ணே... இருக்கு, இதோ பாருங்க, படம் எடுத்து என் ஃப்ரெண்டு ஒருத்தரு அனுப்புனாரு'' அப்படீன்னு கேன்டீன்ல தேவாரம் எழுதுன புத்தகம் இருக்கிற மாதிரி ஒரு படம் வந்துச்சு.

oo

அப்பவும் நான் நம்பல. ஏன்னா "ஆட்சி... யார் ஆட்சி?'. நான் ஆரம்பத்துல இருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன்... "இது யார் ஆட்சி?'

கலைஞர் பெயரால் நடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. கலைஞர் ஆட்சி நடந்தபோது, அந்த ஆட்சிய கலைக்கிறதுக்குத்தான் ஜெயலலிதாவோட தூண்டுதல்ல தேவாரம்ங்கிறவரு அரும்பாடுபட்டாரு, ராஜ்குமார் மீட்பு நடந்துடவே கூடாதுன்னு ரொம்ப... ரொம்ப மெனக்கெட்டாரு.

அதனாலதான் நான் ரெண்டு, மூணு அத்தியாயங்களுக்கு முன்னால சொன்னேன்.

"ராஜ்குமார் மீட்புல நாங்க அங்கதான இருந்தோம். நாங்களும் பாத்துக்கிட்டுத்தான இருந்தோம்'' அப்படீன்னு தேவாரமே வாக்குமூலம் குடுத்தத, ஒரு பேட்டியில இருந்து எடுத்துச் சொன்னேன்.

அந்த சமயம், கலைஞர் ஆட்சியையே கலைக்க நெனைச்ச...

கலைஞருக்கு ஒண்ணும் ஆட்சிக் கலைப்புங்கிறது புதுசு இல்ல. நெறைய தடவ அவரோட ஆட்சிய தியாகம் பண்ணியிருக்காரு. ஆனா, "ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஃபெயிலியர் ஆகிறணும். நக்கீரன் கோபால காட்டுக்குள்ள வச்சு காலிபண்ணிட்டா, ராஜ்குமார் மீட்புக்கு எவனும் போகமாட்டான்'னு திட்டம் போட்டு வீரப்பன் வனாந்தரத்துல கெடையா கெடந்த தேவாரம் கண் பார்வையில் அந்த போலீஸ்காரங்க கொஞ்சம்பேரு மோகன்நிவாஸும் அவனோட சேர்ந்தவங்களும் இருந்தானுங்க. அந்த எடுபுடிகள்ல கொஞ்சம்பேரு இப்பவும் பொறுப்புல இருக்காங்க.

இவங்கள்லாம் அப்போ... தேவாரத்துக்கு மேல யாரு... ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்ன வேலைய செய்ற தேவாரம். தேவாரம் சொல்ற வேலைய செய்ற எடுபுடிகள் உள்ள இருந்த அந்தக் கொடூர சூழல்லதான் நாம ராஜ்குமார் விஷயத்துக்கே உள்ள போறோம். அத தேவாரமும் வீடியோ பேட்டியில ஒத்துக்கிட்டாரு. ராஜ்குமார் விஷயத்தப்போ, ரிட்டையர்டான அவரு, "அத பாத்துக்கிட்டுதான் இருந்தேன். அவங்களுக்கு அனுப்புன கேசட், தகவல் எல்லாம் எனக்கும் வந்தது' அப்படின்னு சொன்னத, நான் போன இதழ்லகூட சொல்லியிருப்பேன்.

அப்படி, கலைஞர் ஆட்சிய காலிபண்ண, காவு வாங்கத் துடிச்ச அந்த தேவாரத்துடைய புக். ஜெயலலிதா கண்ணசைச்சா போதும்... காவு வாங்கும் அந்த தேவாரம் எழுதுன புத்தகம் எப்படி சார் நடப்பு போலீஸ் கேன்டீன்ல? அதுவும் அவரு போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து 97-ல ரிடையர்டு ஆயிட்டாரு. கிட்டத்தட்ட 26 வருஷம் ஆயிருச்சு. 26 வருஷம் கழிச்சு அவரு எழுதுன புத்தகத்த இப்ப போலீஸ் கேன்டீன்ல எப்படி சார் விக்க முடியும்? இதுக்கு யாரு அதிகாரம் குடுத்தா? அப்படி விக்கலாமா? அப்படின்னா... என்ன சார் நடக்குது இங்க?

கலைஞர துள்ளத் துடிக்க கைது பண்ணுனப்ப அதுக்குப் பின்னாடி இருந்ததும் இந்த தேவாரம்தான். வீரப்பன் விஷயத்துல சரண்டராக எல்லா ஏற்பாடும் நடந்தப்ப, அத கெடுத்ததும் இதே தேவாரம்தான். "வீரப்பன் சரண்டராக வந்தா நான் சுடுவேன்'னு சொல்லி சவால்விட்டதும் இதே வால்டர்தான். அவரு புத்தகம் எப்படி போலீஸ் கேன்டீன்ல?

புத்தம் விற்கிறது, புத்தகம் வாங்குறது எல் லாமே நல்ல விஷயம்தான். ஆனா... தி.மு.க. ஆட்சிய காவு வாங்குன... காவு வாங்கத் துடிச்ச ஒரு ஆளு சார் தேவாரம். அவருடைய புத்தகத்த, இப்ப நடந் துக்கிட்டிருக்கிற தி.மு.க. அரசாங்கம் சார்பா நடத் தப்படுற போலீஸ் கேன்டீன்ல எப்படி விற்கலாம்?

நீங்க கேப்பீங்க... "தி.மு.க.வ திட்டுன புக்க விக்கக்கூடாதா?'ன்னு.

ஐயோ... போலீஸ் கேன்டீன்ல வேற எந்த புக்கும் விக்கிறது கிடையாது. இவரு புக்க மட்டும் விக்கிறதுனாலதான் இந்தக் கேள்வியே. அதவிட, போலீஸ் கேன்டீன்ல புத்தகம் வாங்குனா அதுக்கு ஒரு குறிப்பிட்ட பெர்சன்டேஜ் கழிவோடதான் தருவாங்க... அதுவும் இந்தப் புத்தகத்துக்கு தரல.

தம்பி ராஜாவ, "அந்தப் புத்தகத்த வாங்கிட்டு, அத ஒரு செய்தியா எனக்கு குடுங்க'ன்னு சொன்னேன். அந்தச் செய்திய 33-ஆம் பக்கத்துல பாருங்களேன்...

அந்தப் புத்தகம் 494 பக்கம் இருக்கு. நெறைய உள்ள எழுதியிருக்காரு. நான் அதுக்குள்ளல்லாம் போகல சார். ஆனா, நான் சொன்னேன்லியா, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல' அப்படீங்கிற மாதிரி... இந்தப் புத்தகத்த மொழியாக்கம் பண்ணுனவரு துக்கையாண்டின்னு ஒரு போலீஸ் ஆபீஸர். அவரு ஒரு இடத்துல சொல்றாரு. அவரு சொன்னதத் தான் போன இதழ்ல கடைசியா நான் சொல்லி முடிச்சிருப்பேன். "பொதுநல வழக்கில் உச்சநீதி மன்றம் தேவாரம் அவர்களின் கருத்துக்கு மட் டுமே மதிப்பளித்து... வீரப்பனின் வேண்டுகோளை ஏற்கத் தயாராயிருந்த இரண்டு மாநிலங்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அந்த அளவு சக்தி வாய்ந்தது தேவாரத்தின் வாக்கு!'' அப்படின்னு அவரு எழுதுன முன்னுரையில எழுதியிருக்காரு. (இவருதான் ஆங்கிலப் புத்தகத்த தமிழ்ல மொழியாக்கம் பண்ணியிருக்காரு).

இத்தனைக்கும் துக்கையாண்டிங்கிறவரு, ஜெயலலிதாவ கைதுபண்ணுனதுல ஒரு முக்கியமான ஆபீஸர். அந்த விஷயத்துக்குள்ள இப்ப நான் போகல.

ஆனா, கலைஞர் ஆட்சிக்கு எதிரா, தான் செஞ்ச பெரிய சதிய அந்தப் புத்தகத்துல மார் தட்டிச் சொல்றாரு...

அதவிடக் கொடும, அந்த புக்க நம்ம முதல்வர்ட்ட குடுத்து போட்டோவும் எடுத்துருப் பாரு..

. (புழுதி பறக்கும்)