Skip to main content

7 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பேரை பலி வாங்கிய சவுதியின் வான்வழி தாக்குதல்... 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்...

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

ஏமனில் சனா பகுதியில் உள்ள பள்ளி அருகே சவுதி - ஏமன் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இதில் 7 பேர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

yeman

 

இது குறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஹவுத்தி கிளர்ச்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும், மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப்படைக்கும் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் இந்த தாக்குதலை ஐநா சபை முன்னரே கண்டிருந்ததும்  குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்