Skip to main content

நண்பர்களுடன் நீச்சல் பயிற்சிக்காக குளத்தில் இறங்கிய இளைஞர் உயிரிழப்பு

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

A youth who went into the pool for swimming practice with friends lost their live

 

கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து நீர்நிலைகளில் மாணவர்கள், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

காஞ்சிபுரம் அடுத்துள்ள புரசை கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி (17).  இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக அருகில் உள்ள வளத்தூர் கிராமத்திலிருந்த குளத்தில் நீந்தச் சென்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த குளமானது தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் இருப்பதால் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த உமாபதி இக்கரையிலிருந்து அக்கரைக்குச் சென்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்த பொழுது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து சக நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக குளத்தில் தேடி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் உமாபதியின் உடலைக் கண்டெடுத்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடலானது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.