Skip to main content

அதிகாரிகளை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; விளக்கம் சொன்ன ஆளும்கட்சி ஒன்றிய செயலாளர்

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Workers demands the authorities; Secretary of the Ruling Union who gave the explanation

 

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் இருந்து, ஆந்திர மாநில எல்லை – தமிழக எல்லை முடியுமிடத்தில் உள்ள பரதராமி வரை 12 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச். -88) கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சாலை சரியில்லாததால் அடிக்கடி பழுதடைகின்றன. வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்குகின்றனர்.


வேலூர் மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம், குடியாத்தம் நகர தாலுக்கா குழு சார்பில் குடியாத்தம் முதல் பரதராமி வரையிலான உயிர் பலிவாங்கும் குண்டும் குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்காதததை கண்டித்தும், டெண்டர் விட்டு 6 மாத காலம் ஆகியும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு என்பதை வலியுறுத்தி நவம்பர் 11ஆம் தேதி சி.ஐ.டி.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த சூழ்நிலையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் 12 கி.மீ. நீளத்திற்கு தற்போதுள்ள 7 மீட்டர் அகலத்திலிருந்து 10.50 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இப்பணிக்கு ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது என்றும் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள அகற்ற வேண்டிய மரங்கள் மின்கம்பங்களின் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமு விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார் கேள்விகள் எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு அதிகாரி சொல்ல வேண்டியதை ஆளும் கட்சி நிர்வாகி சொல்வது ஏனோ? பணிகள் 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் கரோனா காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சாலைப்பணிகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுவதால், சாலையில் உண்டாகும் பள்ளங்களை அந்தந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர் என்றும் ராமு கூறுகிறார்.

 

ஊரடங்கு தளர்வுகள் நிலையில், பொது போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் காலதாமதம் என்ற விளக்கமே தவறு. விரைவில் சாலைப்பணிகள் தொடங்கி,  முடிக்கப்பட்டு. மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்பதைவிட, போர்க்கால அடிப்படையிலான சீரமைப்பு அவசியம். இந்தச் சாலையை விரிவுபடுத்தி, செப்பனிட நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது தெரிந்தும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவது வேதனைக்குரியது என்கிறாரே வி.ராமு.


சாலையில் பயணிப்போருக்கு தெரியும் வலியும் வேதனையும், ரத்தக் கண்ணீரும், துயரமும் 12 கி.மீ. தொலைவு பயணிப்போரை கேளுங்கள் அல்லது பயணித்து பாருங்கள் உண்மை தெரியும். சாலையை விரைவில் சீரமைக்கக்கோரி,  சாலையில் மழை பெய்யும்போது தேங்கும் நீரில் நாற்று நடும் போராட்டத்தை நடத்துகிறோம். அப்போது தெரியும் சாலையின் அவலம் எனக்கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.