உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மேற்கீந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு அணியும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல்- இல் கலக்கி வரும் போல்ட், மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் டி20 அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என ஏற்கனவே செயலாளர் ஜெய் ஷா அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்திய அணி எப்போது தேர்வு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.
ஐபிஎல்-இல் வீரர்களின் செயல்பாடும் கருத்தில் கொள்ளப்படும் என்கிற ரீதியிலும் தகவல்கள் உலா வந்தது.அதற்கு ஏற்றாற்போல் ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும் என் கேப்டன் ரோஹித் விரும்புவதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஹைதிக்கும் கடந்த சில ஆட்டஙகளாக தொடர்ந்து பந்து வீசி வருகிறார்.
ரோஹித்துடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போகிறார் என்கிற எதிரபார்ர்ப்பும் எழுந்துள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் இணைந்து ஆடவுள்ளதாகவும் தகவ கசிந்தது. தற்போது ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்த தலைவலியாக விக்கெட் கீப்பர் தேர்வு பார்க்கப்படுகிறது. ரெகுலர் விக்கெட் கீப்பர் பண்ட் ஐபிஎல்-இல் ஆடினாலும் அவருடைய பேட்டிங்கில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதால், தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் தான் முதல் தேர்வாக பார்க்கப்படுவார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. கே.எல்.ராகுல் அடந்த இரண்டு வருடங்களாக டி20 போட்டிகளில் ஆடவில்லையென்றாலும், அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு சேர்க்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி வருவதால் அவரும் கருத்தில் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - பெங்களூரு ஐபிஎல் போட்டியின் போது ரோஹித் , தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணி தேர்வு உள்ளது. சிறப்பாக விளையாடு என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறியதும் அதற்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப், சாஹல், பிஷ்னோய் சேர்க்கப்படலாமெனவும் தகவல்கள் உலா வருகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா தவிர்த்து சிராஜ், ஆவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஸ்தீப் சிங் ஆகியோரது பேரும் பரிசீலனையில் உள்ளதென பேசப்படுகிறது.
இந்நிலையில், ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஆகியோர் இன்று (ஏப்.30) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி 15 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.