Skip to main content

“மோடியை பார்த்து அவர் சொன்ன அந்த வார்த்தை வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது” - கரு. நாகராஜன் பேட்டி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

'That word he said to Modi is painful' - Karu Nagarajan interviewed

 

பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலோவில் பூட்டோ பேசியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பாஜகவினர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிறகு பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இந்தியா முழுவதும் 1971 டிசம்பர் 16 ஆம் தேதி நாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை மண்டியிடச் செய்து அவர்கள் கேட்ட மன்னிப்புக்கு பெருந்தன்மையாக மன்னிப்பு கொடுத்தோம். அந்த வெற்றி தினத்தைக் கொண்டாடுகின்ற நாள் நேற்று. இந்தியா முழுவதும் வெற்றி தினத்தைக் கொண்டாடி அந்தப் போரிலே வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

 

இந்த தினத்தில் ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவில் பூட்டோ ஐநா சபைக்குள் அதைப் பேசவில்லை. அங்கு பேசுவதற்கு அவருக்குத் தைரியம் இல்லை. ஐ.நா சபையில் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு நமது பாரத பிரதமரை அவதூறாகப் பேசியுள்ளார். இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையிலும் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகில் மிக மோசமான நாடு என்று அடையாளம் காட்டப்பட்டு இருக்கின்ற நாடு பாகிஸ்தான்.

 

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தவர்கள்; பிரான்சில் தாக்குதல் நடத்தியவர்கள்; அஜ்மல் கசாப்-ஐ இந்தியாவிற்கு அனுப்பி பல நூறு பேரை மும்பையில் கொன்று குவித்தவர்கள்; இந்திய நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சுட்டுக் கொன்றவர்களின் அமைப்புகளுக்கு எல்லாம் அடைக்கலம் தந்து அவர்களை வளர்த்து விடுகின்ற ஒரு மோசமான பயங்கரவாத நாடு பாகிஸ்தான் என்பதை உலகமே அறியும். அந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு; உலகத்திற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்ற நாடு; உலகின் எந்த முடிவுகளை எந்த நாடுகள் எடுத்தாலும் இந்தியாவைக் கேட்டு எடுக்க வேண்டும் என்ற ஒரு அற்புதமான சூழ்நிலையை தந்து கொண்டிருக்கின்ற பிரதமர் மோடியைப் பார்த்து அவர் சொன்ன அந்த வார்த்தைகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எல்லோரும் கண்டிக்க வேண்டும். இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் அவரது மோசமான பேச்சைக் கண்டிக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.