Skip to main content

கெடுபிடி காட்டிய போலீஸ்; அடுத்தடுத்து சிக்கிய மது விற்பனையாளர்கள்

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Police arrest people selling government liquor counterfeit market

 

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சோ்ந்த சத்யராஜ்(25) என்ற வாலிபர் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 54 பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு,  சத்யராஜ் கைது செய்யப்பட்டார். 

 

இதே போன்று  பழையபாளையம் கட் ரோடு சாலையில் சோதனை செய்ததில் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த சிவகுமார்(52) என்பவா் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 139 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.

 

இதனைத்தொடர்ந்து துவரங்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகில் கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை செய்ததில் துவரங்குறிச்சியை சோ்ந்த சுப்பிரமணி(63) என்பவா் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்தும்  11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 182 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் தொடர் சோதனையால் கள்ளச்சந்தையில் அரசு மதுபானங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்