Skip to main content

பெண்களுக்கான வன்கொடுமைகளை கண்டிக்கும் வகையில் இன்று மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பேரணி

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

பள்ளி கல்லூரி வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. இப்பேரணி கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி வ.ஊ.சி. மைதானம் வரை நடைபெற்றது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். 
 

women safety rally


இதில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளும் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அரசே புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் பெண்களை சித்திரவதை செய்வதை நிறுத்து என்றும் பெண்களே கல்விக்காக போராடு, சுதந்திரத்திற்காக போராடு  என்றும் முழக்கமிட்டனர்.  பள்ளி கல்லூரியில் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதை கண்டித்தும் பொள்ளாசியில் நடந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்ததை கண்டித்தும் பேரணி நடைபெறுகிறது.
 

women safety rally


பெண்கள் தங்கள் உரிமைகளை கூறுவதற்கு கூட இந்த சமூகத்தில் இடமில்லை என்றும் பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை சமூகத்தில் சொன்னால் கூட சமூகம் அதை ஒடுக்கத்தான் செய்கிறது. மேலும்  கல்வியில் ஒரு பெண் சாதிக்க வேண்டும் என்றால் பள்ளி வளாகத்திலோ, கல்லூரி வளாகத்திலோ பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.  அதை பற்றிய செய்தி வெளிவருவதில்லை, வெளி வந்தாலும் அது முடங்கப்படுகிறது என்பதை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது.

சார்ந்த செய்திகள்