Skip to main content

குடித்துவிட்டு தகராறு; கணவனை அடித்துக் கொன்ற மனைவி

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

wife who beat her husband for arguing with his wife after drinking

 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகில் உள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான தேவராஜ். இவரது மனைவி 34 வயதான பானுமதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். தேவராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

 

இரண்டு தினங்களுக்கு முன்பு கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான சின்னதகரகுப்பம் வந்துவிட்டார். அங்கும் தேவராஜ் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தெருவில் நின்று தகராறு செய்துள்ளார். 

 

இதில் ஆத்திரமடைந்த பானுமதி வீட்டுக்கு வெளியே கிடந்த கட்டையால் கணவர் தேவராஜை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பலியானார். மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்தவர் குறித்து பொதுமக்கள் தந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்த வாலாஜா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.