கரோனா பரவலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் தமிழக அரசு நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வந்து வாங்கி செல்லலாம் எனக்கூறியுள்ளது.

Advertisment

Money in the box... get bread

அதேநேரத்தில் பன், ரொட்டி, பிரட், பிஸ்கட் போன்றவற்றின் விலை தறுமாறாக உயர்ந்தள்ளது. அதுவும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.அதனைத்தொடர்ந்து திமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட பிரதிநிதியும், முன்னாள்சேர்மனுமான ஸ்ரீதர் மகனின் மருத்துவமனை சார்பில், திருவண்ணாமலை நகரில் காந்திநகர் பழைய புறவழிச்சாலையில் உள்ள சுகஸ்தலா மருத்துமனை முன்பு, ஈசான்ய மைதானம் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு, நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் என 4 இடங்களில் தானியங்கி ரொட்டி, பன் விற்பனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

​இந்த விற்பனை நிலையம் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும். பொதுமக்கள் அங்கிருக்கும் பெட்டியில் 30 ரூபாய் செலுத்திவிட்டு ரொட்டி அல்லது பன் பாக்கெட் எடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஏப்ரல் 11ந்தேதி காலை தொடங்கிவைத்தார்.