Skip to main content

ஆதி தமிழ்குடிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன... திருமா வைகோ விவகாரம் குறித்து சீமான் கருத்து!!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்த நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  நேரில் சென்று தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் வைகோ விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,

 

seeman

 

அரசியல்  சாசனம் கொடுத்திருக்கிற 42 தொகுதி, பழங்குடி மக்களோடு சேர்ந்து 44 தொகுதி, அதைத்தவிர பொதுத்தொகுதியில் ஆதி தமிழ்குடிகளுக்கு, ஒடுக்கப்பட்ட தமிழ் சமூக மக்களுக்கு இந்த திராவிட கட்சிகள் பெற்றுத்தந்தது என்ன. சமூக நீதியை பெற்றுத்தந்தோம், இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தோம் எனக்கூறும் இவர்கள் கொடுத்தது என்ன. இங்கு முடி திருத்துகிற மருத்துவ குலத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு, ஆதி தமிழ் குடிகளுக்கு இங்கு எத்தனை இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

seeman

 

பானை செய்கிற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, துணி வெளுக்கும் சமூகத்தாருக்கு எத்தனை இடங்கள், என்னென்ன அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றியெல்லாம் இவர்கள் பேசமாட்டார்கள். ஆனால் நாம் பேசினால் அதற்கு கோபப்படுவார்களே தவிர பதில் சொல்லமாட்டார்கள்.

 

தேர்தலுக்காக அம்பேத்கர் பற்றி பேசுகிறோம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல, என்னுடைய பேச்சை தொடர்ந்து கேட்பவர்களுக்கு நன்கு தெரியும். திருமண விழாவாக இருந்தாலும் சரி, காதுகுத்து விழாவாக இருந்தாலும் சரி, கல்லூரி விழாவாக இருந்தாலும் சரி, சாதி விழா என இவர்கள் கற்பிக்கின்ற எந்த விழாவிலும் சரி அண்ணல் அம்பேத்கர் பற்றிய லட்சிய வரிகளை மேற்கோள்காட்டி பேசாமல் கடந்து சென்றதே இல்லை எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்