Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்த தன்னார்வலர்கள்!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

கஜா புயலில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று அரசாங்கங்கள் சொன்னது. பல கிராமங்களில் அரசாங்க வீடுகளுக்காக காத்திருந்தனர் விவசாயிகள். உடைந்து வீடுகளுக்கு கூட முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என்று புலம்பினார்கள். முத்துப்பேட்டையில் ஒருவர் தனது வீட்டுக்கு நிவாரணம் கேட்டு கேட்டு அலைந்தார் கிடைக்கவில்லை அதனால் கஜா நினைவு இல்லம் என்று உடைந்த வீட்டை நினைவுச்சின்னமாக மாற்றிவிட்டார்.

 

 Volunteers who built houses for people affected by the Caja storm

 

இந்த நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு உக்கடை அம்பாள்புரம் கிராமத்தில் கஜா புயலால் ஏராளமான குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டது. இதையடு‌த்து நிவாரணப்பணிகளுக்காக வந்தவர்கள் வீடுகளின் அவலநிலையை பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் புதுக்கோட்டை விதைக்-கலாம் அறக்கட்டளை சார்பில் வீடு கட்டித்தர முடிவெடுத்தனர்.

அடுத்த சில மாதங்களில் பணிகளை தொடங்கினார்கள். பணிகள் முடிவடைந்த நிலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான, 18 புதிய வீடுகளும், 8 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா வைத்து ஒப்படைத்தனர். 

 

 Volunteers who built houses for people affected by the Caja storm


இந்நிகழ்ச்சிக்கு துபாய் வாழ் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை ஏ.என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி கோ.செல்வம், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் புதுக்கோட்டை சொக்கலிங்கம், டாக்டர் ராமசாமி, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் விதைக்-கலாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கட்டயங்காடு உக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் புதுக்கோட்டை விதைக்-கலாம் அறக்கட்டளை சார்பில்,  ரூ 40 ஆயிரம் மதிப்பில் பள்ளியில் அமைக்கப்பட்ட தரைத்தளம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 

 Volunteers who built houses for people affected by the Caja storm

 

புயலில் ஒட்டுமொத்த கிராமங்களும் பாதிக்கப்பட்டு நடக்க கூட வழியில்லாமல் நின்ற போது தங்களுக்கான பாதைகளை தாங்களே உருவாக்கிக் கொண்ட இளைஞர்கள் மீட்புப் பணிக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கவில்லை. களமிறங்கினார்கள் சாலைகளை சீரமைத்து மின்கம்பங்களை நட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே கொடுக்க வேண்டிய உணவு, உடை போன்ற அரசு நிவாரணப் பொருட்களை ஒருமாதம் கடந்து பாதிப்பேருக்கு கொடுத்தனர். ஆனால்  இளைஞர்கள் களமிறங்கியதால் அரசாங்கத்தின் பணி 75 சதவீதம் முடிந்திருந்தது. இப்போது வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறார்கள். பாராட்டுவோம் இளைஞர்கைளை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.