Skip to main content

காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தூர்வாரிய நெடுவாசல் கிராம மக்கள்

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
n

    

கல்லணை கால்வாய் ஈச்சன்விடுதி முக்கனிப் பாலத்தில் இருந்து குரும்பிவயல், செருவாவிடுதி, நெடுவாசல் வரை பாசனம் பெரும் வகையில் பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் வாய்க்கால் இருந்த இடமே தெரியாத அளவில் மறைந்துவிட்டது. அதனால் பாசனம் பெற்ற சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களும் தண்ணீர் இன்றி தரிசாக கிடந்துள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த வாய்க்காலை மறந்துவிட்டிருந்தனர். ஈச்சன்விடுதியில் தண்ணீரை தேக்கி பகிர்ந்து அனுப்பும் பாலத்திற்கு முன்பே இந்த வாய்க்கால் உள்ளதால் கல்லணை கால்வாயில் தண்ணீர் வந்தாலே நெடுவாசல் வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அந்த வாய்க்கால் தான் காணாமல் போது.

 

n


    இந்த நிலையில் நீர்நிலைகளை உயர்த்தினால் தான் நிலடித்தடி நீர்மட்டம் உயரும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் கிராம விவசாயிகள், இளைஞர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி ஈச்சன்விடுதி முக்கனிப் பாலத்தில் இருந்து நெடுவாசல் கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவுள்ள குடிமாத்தன்குளம் என்கிற உடையான் குளம் வரை சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு வாய்க்காலை தூர்வார முடிவெடுக்கப்பட்டது. அதற்காண நிதியை பாசன விவசாயிகள் மற்றும் தன்னார்வளர்கள், கிராம இளைஞர்கள் செய்வது என்ற முடிவின்படி கடந்த ஆகஸ்ட் 15 ந் தேதி தூர்வாரும் பணி தொடங்கியது. இதுவரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையாக வாய்க்கால் சீரமைக்கபட உள்ளது. அதன் பிறகு நேரடியாகவும், குடிமாத்தான்குளம் பாசன பகுதியும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயனடையும்.

 
    மேலும் இந்த வாய்க்காலில் இருந்து நாடன் ஏரி, 140 ஏக்கர் பரப்பளவுள்ள நெடுவாக்குளம் ஆகிய குளங்களை தூர்வாரி அந்த ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதற்காண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால் நிலத்தடிநீர்மட்டம் உயரும் என்கின்றனர் விசாயிகள்.


    அதே போல நெடுவாசல் கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் குளத்தை நெடுவாசல் இளைஞர் மன்றத்தினர் ரூ. 2 லட்சம் செல்வில் முழுமையாக தூர்வாரியுள்ளனர். அதே போல இன்னும் சில குளங்களையும் தூர்வாரி மராமத்து செய்யும் முயற்சியில் உள்ளனர். 


    இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது.. நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்திருந்தால் தான் அந்த ஊர் செழிக்கும். அதனால் தான் காணாமல் போய் இருந்த பாசன ஆற்றுவாய்க்காலை கண்டுபிடித்து பாசனதாரர்கள், தன்னார்வளர்கள் உதவியுடன் கிராம மக்கள் தூர்வாரி வருகிறோம். குளங்களையும் தூவாரியுள்ளோம். விரைவில் நெடுவாசலில் உள்ள அத்தனை குளம் ஏரிகளும் தூர்வாரப்பட்டு மழைக் காலத்தில் முழுமையாக தண்ணீரை சேமிக்கும் முயற்சியில் உள்ளோம். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முயற்சி செய்தால் நீர்நிலையை உயர்த்தலாம் என்றனர்.


 

சார்ந்த செய்திகள்