செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பூங்கா அருகே ரூபாய் 55 கோடியில் அமைக்கப்பட்ட 711 மீ. நீளம், 23 மீ. அகலம் கொண்ட ஆறு வழி சாலை மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி நேரில் திறந்து வைத்தார்.
மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட மேம்பாலத்தில் அரசு பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, "போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணிகள் முடிந்து டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். பணிகளை முடித்து பெருங்களத்தூர் மேம்பாலத்தை 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூபாய் 82.66 கோடி மதிப்பீட்டில் 4 ஆண்டுகளாக 1.53 கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.