Skip to main content

கெட்டுப் போன கேக்;  உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

ulundurpettai toll gate bakkery shop inciedent

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும்  பல ஹோட்டல்கள், பேக்கரி கடை, பிரியாணி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் இப்பகுதியில் வசிப்பவர்களும், வாகனங்களில் பயணம் செய்பவர்களும் இப்பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளிலும் தங்களுக்கு தேவையான உணவு வகைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இப்பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் ஆவலம் என்ற ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அந்த பேக்கரி கடை ஒன்றில் ஒரு கிலோ 600 ரூபாய் விலையில் கேக் ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார்.

 

இதையடுத்து அன்று மாலை அவர் அந்த கேக்கை வெட்டி தனது தனது பிறந்த நாளை கொண்டாடினார். கேக்கை தனது  நண்பர்களுக்கு சாப்பிட பகிர்ந்து கொடுக்க எடுத்தபோது கேக் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அந்த பேக்கரி கடைக்கு அந்த கேக்குடன் சென்று இது குறித்து கேட்டுள்ளனர். இதனால் பேக்கரி கடை உரிமையாளர்களுக்கும் சசிகுமார் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தக் கெட்டுப் போன கேக்கை கடை உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து சசிகுமார் நண்பர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து அப்பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் அன்று இரவு 8 மணி அளவில் சம்பந்தப்பட்ட பேக்கரி கடைக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேக்கரியில் கேக் செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய சேகரித்தார். அதோடு வாடிக்கையாளருக்கு கெட்டுப் போன கேக்கை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தார். பேக்கரி கடையில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் அதை தயாரிக்க சேர்க்கப்படும் உப பொருட்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் தரமற்றவை என்று கருதினால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரி கதிரவன் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Paytm Passtag will be invalid from tomorrow

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் எளிமையாக சுங்க கட்டணங்களை செலுத்துவதற்காக பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பே.டி.எம் பாஸ்டேக் மூலமும் சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை ஆணையம், நாளைக்குள் வாடிக்கையாளர்கள் பே.டி.எம் பாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் இருப்பு தொகையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், அபராதமின்றி சுங்கசாவடிகளைக் கடந்து செல்ல பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு கணக்கை மாற்ற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

விதிமீறல் புகாரில் சிக்கிய பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆர்பிஐ ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை தொடர்ந்து பே.டி.எம் பாஸ்டேக் வைத்துள்ளோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிவுறுத்தலை வேண்டுகோளாக விடுத்துள்ளது.