
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கிராமம் ஆந்திரா தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இதில் வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே பரதராமி சந்தைக்கான ஏலம் விடும் நிகழ்வு குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்திற்காக ஏலம் கோருவதற்காக பதிவு செய்திருந்தனர். ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவலர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பினர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.