Skip to main content

 அதிமுக எம்.பி. குமார் மீது திமுகவினர் தாக்குதல்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

திருச்சி பொன்மலையில் பேருந்து நிலையம் கட்டுவது தொடர்பாக அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில்  எம்.பி.குமார் தாக்கப்பட்டார். 

 

k

 

பொன்மலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் எம்.பி. குமார் தனது தொகுதி  நிதியில் இருந்து 7 லட்சம் ஒதுக்கி பேருந்து நிலையம் கட்ட அனுமதி பெற்றிருந்தார்.    இதற்காக பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.    ரயில்வே துறையில் இதற்குரிய அனுமதி பெறாமல் இடிக்கப்படுவதாக கருதி,  திமுகவினர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தந்துள்ளனர்.  உடனடியாக அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.   இதனால் அதிமுக - திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.   ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.  கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.  இந்த தாக்குதலில் குமார் எம்.பி. கடுமையாக தாக்கப்பட்டார்.   திமுக வட்ட அலுவலகம் மீதும் தாக்குதல் நடந்தது.  இந்த பதற்றத்தை அடுத்து அங்கு மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அங்கு விரைந்து வந்து எச்சரித்தும் இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் போலீசார் அடிதடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.  இந்த சம்பவத்தால் திருச்சியில் பதற்றம் நிலவுகிறது.  

 

kkkk

 

சார்ந்த செய்திகள்