Skip to main content

2 வேட்பாளர்களை மட்டும் அறிவித்த த.மா.கா.

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tmc declared only 2 candidates

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது. பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடும் நிலையில், முதற்கட்டமாக 2 வேட்பாளர்களை மட்டும் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

சார்ந்த செய்திகள்