Skip to main content

முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Time change of major trains

 

வைகை, பொதிகை மற்றும் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்ட கால அட்டவணை நாளை (01.10.2023) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 

ரயில்களின் கால அட்டவணை மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12636) காலை 7.10 மணிக்கு பதிலாக 6.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதே சமயம் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12635) வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

 

செங்கோட்டை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12662) மதுரையில் இருந்து இரவு 09.55 மணிக்குப் பதிலாக 09.45 மணிக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர்  - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12661) மதுரையில் இருந்து அதிகாலை 04.45 மணிக்குப் பதிலாக 04.30 மணிக்கு இயக்கப்படும். மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12638) மதுரையில் இருந்து இரவு 09.35 மணிக்குப் பதிலாக 09.20 மணிக்கு இயக்கப்படும்.

 

மதுரை - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்குப் பதிலாக 07.00 மணிக்கு இயக்கப்படும். மதுரை - விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16868) மதுரையில் இருந்து அதிகாலை 04.05 மணிக்குப் பதிலாக 03.35 மணிக்கு இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்