Skip to main content

ஸ்டெர்லைட் போராட்டம் - தலைவர்கள் மீதான வழக்கு வாபஸ்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

thoothukudi district sterlite plant tn govt announced

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடியில் 22/05/2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, தமிழக முதல்வரிடம் 14/05/2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

 

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக முதல்வர் 21/05/2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார். 

 

1. ஆர். நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
2. வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக
3. கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
4. டி.டி.வி. தினகரன், பொதுச்செயலாளர், அமமுக
5. பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேமுதிக
6. எல்.கே. சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேமுதிக
7. அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர், திமுக
8. அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
9. ராஜா, மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
10. ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அமமுக
11. பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்.
12. ஆர்தர் மச்சோடா, துணைச்செயலாளர், ஆம் ஆத்மி கட்சி.
13. பாலசிங், ஒன்றியச் செயலாளர், திமுக

 

 

சார்ந்த செய்திகள்