Skip to main content

"முழு ஊரடங்கு பற்றி அரசே முடிவெடுக்கும்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

tamilnadu chief election officer press meet

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசுதான் முடிவு செய்யும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்குத் தெரிவித்துள்ளோம். தேர்தல் வழிமுறைகளைப் பின்பற்றி மே 2ஆம் தேதி (ஞாயிறு) அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும். சுமார் 16,387 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி இல்லை. ஆர்டி - பிசிஆர் பரிசோதனை, தடுப்பூசி சான்று ஆகியவை இருந்தாலும், 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் அனுமதி இல்லை. தொகுதிகள், அதிகாரிகள் ஆகியவற்றைப் பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை மாறலாம்" என்றார். 

 

மே 1, மே 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், தேர்தல் அதிகாரி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு தேவையா? உள்ளிட்டவை குறித்து ஆலோசித்திருந்தார். மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளின்படி, மே மாதத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்பதை தமிழக அரசு இன்றோ (அல்லது) நாளையோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு எண்ணிக்கை; சத்யபிரதா சாகு முக்கிய ஆலோசனை! 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Counting of votes Satyapratha Sagu Important Advice

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில்  வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது சிசிடிவி கேமரா வசதிகள், 3 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். 

Next Story

4 மாநில தேர்தல் முடிவுகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

4 state election results  Chief Minister M. K. Stalin's greetings
கோப்புப்படம்

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு காலமாக, வெற்றி பெற்றவர்களின் ஆட்சிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.