Skip to main content

என்னை காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதியா? நடிகை ஆண்ட்ரியா அதிரடி பதில்!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

சில நாட்களுக்கு முன்பு நான் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார். இது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையானது. அதாவது, நடிகை ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன். அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார். 
 

actress


மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். அதோடு,  அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் "broken wings" புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் அந்த நபரை பற்றி வெகு விரைவில் சொல்லப்போவதாக தெரிவித்து இருந்தார். இதனால் ஆண்ட்ரியாவுக்கு மிரட்டலும் புத்தகத்தை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்பட்டது. 


இந்த நிலையில் ஆண்ட்ரியா தற்போது அளித்துள்ள விளக்கத்தில், “நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் என்னை மறந்து வெளிப்படையாக பேசிவிட்டேன். எனது மோசமான காதல் குறித்து சில விஷயங்களை வெளிப்படுத்தியதும் உண்மைதான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. கற்பனையாக யாரோ அதை கிளப்பி விட்டு விட்டனர். என்னை காதலித்தவர் அரசியல்வாதியாக இருக்கும் நடிகர் இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.