Published on 23/08/2023 | Edited on 23/08/2023
மத்திய அரசின் கல்வின் நிலையங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப இந்தி மொழி தேர்வு புகுத்தப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'இந்தி திணிப்பால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. என்.ஐ.டி உள்ளிட்ட பல மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லா பணிகளுக்கு கட்டாய இந்தி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டாய இந்தி தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் பொதுவான தேர்வு நடத்த வேண்டும். மொழியியல் சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை இந்தி திணிப்பு பாதிக்கிறது' என தெரிவித்துள்ளார்.