

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (07/04/2022) தலைமைச் செயலகத்தில், உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வசிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமத்துடன் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வின் போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பூஜா குல்கர்னி இ.ஆ.ப., ஹாங் ஃபூ தொழில் குழுமத்தின் தலைவர் T.Y.சாங், பொது மேலாளர் ஜென்னி சென், ப்ளோரென்ஸ் காலணிகள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அகீல் அகமது மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.