Skip to main content

வலுப்பெறும் புயல்... கடலோர மாவட்டங்களில் புயல் கூண்டு ஏற்றம்!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

 Storm cage boom in coastal districts!

 

தமிழகத்தில் வரும் மே 9 ஆம் தேதியன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலைத்தில் பல்வேறு கடலோர மாவட்டங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வரும் ஞாயிற்றுக்கிழமை புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் மே 8 ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பொழியும். வரும் 9 ஆம் தேதி புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்,  தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மே 8 ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில் இயல்பைவிட அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸை தாண்டலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தருமபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில், இண்டூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கடலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்