Skip to main content

போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது-வேல்முருகன்

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை  கட்சி தலைவர் வேல்முருகன் பின்வரும்  கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்...

தமிழகத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடிக்கொண்டிக்கும் நேரத்தில்  தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ளதை தமிழக வாழ்வுரிமை கட்சி கடுமையாக கண்டிக்கிறது. தமிழ் தெரிந்த வீரர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் தமிழக இளைஞர்கள் கடும் கோபத்திலுள்ளார்கள் எனவே உணவு விடுதி, சினிமா என வெளியே செல்லும் வீரர்களுக்கு ஜனநாயக தாக்குதலை மீறி தனிப்பட்ட பிரச்சனையோ, தாக்குதலோ நடந்தால்  வாழ்வுரிமை கட்சியோ அல்லது காவிரி மீட்பு குழுவோ பொறுப்பேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 
 

velmurugan

 

நாளை சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி நடக்கவுள்ள பேரணியை நெடுமாறன் துவக்க, நான் தலைமை ஏற்கவிருக்கிறேன். மேலும் விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பல அமைப்பு சார்ந்தவர்கள் கலந்துகொண்டு கண்டனவுரை ஆற்றவுள்ளனர். 

இதுபோன்று தமிழர்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் மதியாமல் பெரும் பாதுகாப்புடன் வீம்பிற்கு தமிழக கிரிக்கெட் வாரியம் இந்த ஐபிஎல் போட்டியை நடத்துவது பின்னாளில் பெரும் பிரச்சனையை உருவாக்கும். இது தொடர்ந்தால் தமிழக கிரிக்கெட் வாரியத்தின் ஊழல்கள் ஏமாற்று வேலைகளை வெளிக்கொணரும் போராட்டமாக எங்கள் போராட்டம் வடிவெடுக்கும் இதனால் கிரிக்கெட் என்றாலே காரித்துப்பும் அளவிற்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழும்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். 

இந்த போராட்டத்தை "முட்டாள் தனம்" எனக்கூறும் சிலருக்கு நான் கூற விரும்புவது இந்த நாட்டிலுள்ள சில முட்டாள் அமைச்சர்களும், முட்டாள் தலைவர்களும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளமல் முட்டாள்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு போராளிகளின் உணர்வு புரியாது.

சார்ந்த செய்திகள்