Skip to main content

தொண்டனின் மனைவி மரணம் - மன்னிப்பு கேட்ட சீமான்

Published on 03/08/2019 | Edited on 04/08/2019

 

பாரதிராஜாவின் 'என் உயிர்தோழன்' படத்தில் வரும் கதாநாயகன் கேரக்டர் மாதிரி, தன் தலைவனையே சுற்றி சுற்றி வருபவர் தமிழ்மணி.  திருமணம் ஆகி சீமானிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார்.  வீட்டில் எந்த நேரமும் சீமான் புராணம்தான்.    2016 சட்டமன்ற தேர்தலில் திருமங்கலத்தில் நாம் தமிழர் வேட்பாளராக நின்றவர் தமிழ்மணி.

 

t

 

நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர், மதுரைக்கு அருகில் உள்ள வத்திராய்ப்பில் நகைகடை நடத்தி வந்தவர், சீமானின் தீவிர பற்றாளர்  என்றே சொல்லலாம்.  தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியிருக்கிறார்.  எப்போது பார்த்தாலும் கையில் கட்சி நோட்டீஸ் வைத்துக்கொண்டு, வருவோர் போவோரிடம் கொடுத்து கொண்டே இருப்பவர். தன் கடையில் வரும் வாடிக்கையாளர்களிடமும் கட்சி கொள்கை நோட்டீஸ் கொடுப்பது வழக்கம்.  அந்தளவுக்கு கட்சி மீது பற்று உள்ளவர் ... என்றார் செந்தில்.

 

அருகில் இருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் {பெயர் வேண்டாம்}  தமிழ் சீமான் வெறியன் சார்.  அண்ணே தான் அவர் குழந்தைக்கு இன்பதமிழன், தமிழ்நிலா என்று பெயர் வைத்தார். 

 

 

j


மனைவி வீட்டாரின் பெரும் முயற்சியால் திருமங்கலம் அருகில் உள்ள வத்திராய்ப்பில் நகை கடை வைத்து சிறப்பாக நடத்தி வந்த நிலையில் வினையாக வந்தார் துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி பொறுப்பாளர்.  இவர் தமிழ்மணியின் நகைக்கடையில் நகை எடுக்கிறார்.  அதில் ரூ.65 ஆயிரம் துண்டு விழ, ஒரு வாரத்தில் தந்துவிடுகிறேன் என்று நகையை கொண்டு செல்கிறார்.  சரி, கட்சிகாரர்தானே என்று விட்டுவிட ஒரு வாரம் ஒரு வருடமாகிறது.  

 

 கட்சி கட்சி என்று இவர் இருந்தபடியால் கடையை சரிவர நடத்தாமல், தன் சொந்த செலவில் மீட்டிங், தெருகூட்டம் என்று இருந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட கடன் தொகை 65 ஆயிரத்தை கேட்கிறார். துரைமுருகனோ ”இங்க பாரு தமிழ்’ நான் இப்ப அண்ணனுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டேன்.  கட்சியின் அனைத்து செய்திகளும் என் மூலமாக தான் போகிறது.   தனியா யூடியூப் சேனல் வச்சிருக்கேன்.  உனக்கு மாநில அளவில் பதவி வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை காட்ட தமிழ்மணியோ அண்ணே எனக்கு பதவி எல்லாம் வேண்டாம்.  இப்படியே இருந்துட்டு போகிறேன்.  இப்ப எனக்கு ரொம்ப பணகஷ்டம் இருக்கு.    தயவு செய்து பணத்தை திருப்பி கொடுங்க. நீங்க நம்ம கட்சிகாரராக இருந்துட்டு இப்படி செய்யலாமா இப்படியே போனா நான் அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்ல,

துரைமுருகன்

d

 

இப்படியே நாட்கள் நகர திடீரென துரைமுருகனிடம் இருந்து போன், கெட்ட கெட்ட வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு இதை தாங்கி கொள்ளமுடியாமல் வீட்டிற்கு வந்த தமிழ்மணி தன் மனைவியிடம் சொல்கிறார்.  மனைவி அவருக்கு ஆறுதல் கூறி, ”சீமான் அண்ணனிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லுங்க.  அவர் கட்டாயம் ஒரு தீர்வு சொல்லுவார்.  அப்பதான் துரைமுருகனும் பயந்து பணத்தை திருப்பி கொடுப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

 

 சரி என்று தமிழும் தன் தலைவருக்கு போனை போட்டிருக்கிறார்.  எதிர் முனையில் பேசிய தலைவர் சீமானோ, இவர் விசயத்தை சொல்லுவதற்கு முன்பே, எல்லாம் துரை சொல்லிட்டான்பா அவரை பிளாக்மெயில் பண்றியாமே. அண்ணனுக்கு நான் நெருக்கம்.  அடிக்கடி போனில் பேசுகிறேன், உன்னை மாநில பொறுப்பில் இருந்து எடுத்திடுவேன் என்று மிரட்டுகிறாயாமே என்று சொல்லிகொண்டே இவரை பேசவிடாமல் ஒருமையில் திட்ட ஆரம்பிக்கிறார்.   என்னண்ணே இப்படி சரியாக விசாரிக்காமல் கண்டமேனிக்கு திட்டுகிறீர்கள்.  என் மனைவி அருகில் இருக்காங்க.   நாங்க இரண்டுபேருமே உங்க மேல அளவுகடந்து பாசம் வச்சிருக்கோம் என்று சொல்ல, அதை காதில் வாங்காமல்,  உன்னை கட்சியிலிருந்து இந்த நிமிடமே நீக்குகிறேன் வெளியே போடா நாயே.. என்று கோவமாக திட்டி போனை வைத்துவிட்டார்.

 

வேகமாக வீட்டிலிருந்து வெளியேறிய தமிழ்மணி குடித்துவிட்டு வந்து வீட்டின் மாடியில் தூக்கு போட முயற்சிக்க அதை தடுத்து நிறுத்திய மனைவி ஓ...........வென்று கதறி அழ, இந்த மனுசன் கிறுக்கா திரிஞ்சாரே.. கட்சி, கட்சி பணம், காசு எல்லாத்தையும் விட்டு இப்ப யாருக்காக உயிரையே வச்சிருந்தாரோ அவரே போடா நாயே என்கிறாரே என்று அழுததை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.

 

அடுத்த நாள் மீண்டும் துரைமுருகன் ஆட்கள் போன் செய்து தொந்தரவு கொடுக்க, கணவர் தமிழ்மணி வேலைக்கு போன சிறிது நேரத்தில்,  மனைவி ஜான்சி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள,  தகவல் தெரிந்து ரோட்டில் உருண்டு கதறி அழ,  அடுத்தநாள் மதுரை அரசு மருத்துவமனையில் போஸ்மார்டம் முடிந்து அவரின் சொந்த ஊரான பேரையூருக்கு உடல் கொண்டுவரபட்டது.  அங்கு சீமான் நேரில் வந்திருந்து ஆறுதல் கூறினார்.


அண்ணே என் தெய்வம் போயிட்டா அண்ணே என்று கதறி அழுதபோது,  அருகில் இருந்தவர்கள்,  இந்த ஆறுதலை அப்போதே சொல்லியிருந்தா தமிழ்மணி மனைவி இப்படி கணவரை குழந்தைகளை விட்டுவிட்டு போயிருக்காது என்று சொல்ல ஒரு நிமிடம் சீமான் கண்ணில் கண்ணீர் வந்தது.


பாரதிராஜாவின் ’என் உயிர் தோழன்’ படத்தில் வரும் பாபு கேரக்டர் மாதிரி சார் எங்கள் தமிழ்மணி.  இப்ப அந்த இரண்டு குழந்தைக்கு  யார் பதில் சொல்வது என்று அருகில் இருந்தவர்கள் சொன்னதும்,  ’’தமிழ் மன்னிச்சிடுடா என்று அழுதார் சீமான்.

 அப்ப கூட  தமிழ், ‘’நீங்க சிங்கம்ண்ணே ...என் தலையெழுத்து ...’’என்று ஓவென்று கதறி அழுதது எல்லோர் நெஞ்சையும் உலுக்கியது.

 


                                                                  

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்