Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,784 கனஅடியாக அதிகரிப்பு!

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,200 கனஅடியில் இருந்து 14,784 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.11 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 92.05 டிஎம்சியாக இருக்கிறது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 14,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 750 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

salem district mettur dam water increased

 

இதனிடையே காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 8,500 கனஅடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்