தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச்சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் குற்றச்செயலில் ஈடுப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளாகவும் இருந்து வருகின்றனர். இதில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகின்ற சிறைவாசிகளை சீர்திருத்தம் செய்யவும் அவர்களின் குடும்ப ஊதியத்திற்காகவும் சிறையிலே சில சிறு குறு பணிகளை செய்ய வைத்து அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டும் வருகிறது.
அதில் சிறைவளாகத்திற்குள்ளும், சிறைவளகாத்திற்கு வெளியிலும் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை புழல் சிறையும் பன் தொழிற்சாலையும், கோவை சுண்ணாம்பு கல் மற்றும் அட்டை தயாரித்தல், வேலூர் பூட்ஸ் தயாரித்தல் என இன்னும் உள்ள பல சிறைகளிலும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் தற்போது கோழிப்பண்ணை கொண்டுவந்து செயல்படுத்தியுள்ளனர். வருகின்ற 23 தேதி காலையில் தமிழக முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் அந்தந்த சிறை கண்காணிப்பாளர் தலைமையில் தொடங்க உள்ளனர்.
இதனால் சிறை காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளும் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்களாம். சிறு தொழில் என்பது வரவேற்க்கூடியாதக இருந்தாலும் கோழிப்பண்ணை என்பது பல நோய்களை கொண்டு வரக்கூடியது. அதன் மூலமாக தண்டனை கைதிகளுக்கு ஏதாவது தொற்று நோய் வரக்கூடும் அதற்கு காவலர்களே பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிறைக்குள் இருக்கும் ஒரு மரத்தை வெட்டினால் கூட அதை தணிக்கை பதிவேடு பராமரித்து அரசிடம் ஆவணப்படுத்த வேண்டும். அந்த வகையில் கோழிப்பண்ணை உள்ள கோழிகள் இறக்கும் பட்சத்தில் அதன் பொறுப்பாக இருப்பவர்களும் அங்கு சிறைவாசிகளும் பணியிலும் இருக்கும் காவலர்களுமே பொறுப்பாகவர்கள் என்பதால் அவர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்கு எடுத்துகாட்டாக சில நாட்களுக்கு முன்பாக புழல் சிறையில் 2 உள்ள சிறைகாவலர் ஒருவர் பேனா இல்லாத காரணத்திற்காகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் டி.ஜி.பி., என்றால் நாளை கோழி உயிர் போனாலும் அந்த கோழியால் சிறைவாசிகள் பாதிக்கப்படாலோ யார் பதில் சொல்வது என்பதே கேள்வியாக வைக்கிறார்கள்.அதேபோல் திருச்சி மத்திய சிறையில் கூட மீண்பண்ணை அமைக்கப்பட்டது. சிறைக்கு உள்ளே இல்லாமல் சிறைக்கு வெளியேதான் வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் சிறைக்குள்ளே இந்த கோழிப்பண்ணையை வைப்பது தான் பிரச்சனை எழுகிறது என சிறை போலீசார் புலம்பி தள்ளுகின்றனர்.
இப்போதும் திறந்தவெளி சிறை மூலமாக கோவை சிங்காநல்லூர் மதுரை சிவகங்கை போன்ற பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர். அதுபோன்ற இடங்களில் இதுபோன்ற கோழிப்பண்ணைகளை வைத்தால் எந்த பிரச்சனையும் எழும்பாது. ஆனால் இவர்கள் சிறைக்குள்ளே வைப்பதுதான் பிரச்சனையாகவே உள்ளது.
இதுபோன்ற விசியங்களுக்கு அரசிடம் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக தமிழக உள்துறை செயலாளர் ஒப்பதலுக்கு பிறகே செயல்படுத்த முடியும். ஆனால் இது தொடர்பான தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஒப்புதலுக்கு சென்றுள்ளதாகவும் அதற்கு அவர் இதனை மறுத்துள்ளதகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் அதையும் மீறி தான் எடுத்த காரியத்தை செய்தே தீர வேண்டும் என சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் செயல்படுத்த உள்ளாராம். ஆனால் அதற்கான நிதியை யார் வழங்குவது. அதன் திட்டம் என்ன, என்கிற பல கேள்விகளுக்கும் பதில் தெரிவிக்காமலே ரகசியமாகவே செயல்படுத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.