Skip to main content

மணல் கடத்திய நிருபர்... வழக்குப் பதிந்து கெத்துக் காட்டிய போலீஸ்!

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

நிருபர் எனக் கூறிக் கொண்டே இண்டிகாவில் ஆரம்பித்து போலிரோ பிக் அப் வண்டி வரை தொடர்ச்சியாக மணல் கடத்தலில் ஈடுப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து கெத்துக் காட்டியுள்ளது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

 

 Reporter of sand abduction...


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்துறை துணை சரகத்தின் முக்கியத் தலைவலியே வைகையாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மணல் திருட்டே. காவல்துறை துணைச்சரகத்தில் டி.எஸ்.பி-யாக கார்த்திக்கேயன் பொறுப்பேற்ற பிறகு மணல் திருட்டிற்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்க மணல் திருட்டும் குறைந்து வந்தது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் மானாமதுரை பகுதி நிருபராக பணியாற்றி வருபவர் ராஜசேகரன் மகன் சசிகுமார். பாண்டியன் நகரில் வசித்து வரும் இவர், ஆற்று மணலை மூடையாகக் கட்டி தலைச்சுமையாக சுமந்து, இவருடைய போலிரோ பிக் அப் (TN 63 K 6908) வண்டியில் குவித்து வைப்பதற்காக பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பயன்படுத்தி மணலை திருடி வந்தது காவல்துறைக்கு அரசல் புரசலாக தெரிந்திருக்கின்றது. இத்தகைய வேளையில், இன்று மானாமதுரை தயா நகர் அருகே சிவகங்கை கனிமவளத்துறை அதிகாரிகள் வாகனச்சோதனை நடத்திய போது போலிரோ பிக் அப்வேனில் மணல் கடத்தி வந்த நிருபர் சசிகுமாரை நிறுத்தியுள்ளனர்.

 

 Reporter of sand abduction...

 

முதலில் நான் நிருபர்.. செய்தி போட்டு விடுவேன்.. என மிரட்டிப் பார்த்திருக்கின்றார். அதிகாரிகள் பணியவில்லை என்பது அங்கிருந்து நிருபர் எஸ்கேப்பாக, திருட்டு மணலுடன் போலிரோ பிக் அப் வண்டியை மானாமதுரை சிப்காட் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இருபிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கெத்துக்காட்டிய காவல்துறை நிருபர் சசிகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவிவருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்