Skip to main content

குப்பையில் வீசப்பட்ட ரேஷன் கார்டுகள்-போலீஸ் விசாரணை!

Published on 06/10/2019 | Edited on 06/10/2019

 

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நகரின் அரசு மருத்துவமனை அருகில் உள்ள குப்பை கிடங்கில் ரேஷன் கார்டுகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கோட்டை நகர காவல் நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அங்கு சோதனையிட்டபோது மொத்தம் 23 ரேஷன் கார்டுகள் கிடைத்தன. 

ரேஷன் கார்டுகளை வீசியது யார் என்று அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் பதில் கிடைக்காமல் போகவே கார்டுகளை காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அவைகள் அனைத்தும் பழைய உபயோகப்படுத்தப்பட்ட ரேஷன் கார்டுகள் போன்று தெரிந்திருக்கிறது. முகவரிகள் சரியாக தெரியவில்லை எனவே இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குப்பையில் ரேஷன் கார்டுகள் வீசப்பட்ட சம்பவம் நகரில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்