Skip to main content

ஒரு தொகுதியாயினும் தனி சின்னத்தில் போட்டி- அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

அதிமுக தலைமை அலுவகத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்துள்ளார்.

 

 

இன்று காலை முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. 

 

puthiya tamilkam party leader krushnasamy inteview in admk head office

 

வரும் 6  ஆம் தேதி புதன்கிழமை வண்டலூர் அருகே அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிமுக அமைச்சர்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் பங்குபெற்றுள்ளனர்.

 

இதனிடையே மக்களவை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட புதிய தமிழம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ராயபேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு வருகை தந்ததை அடுத்து ,கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  

 

அதன்பின் ஓபிஎஸ்சும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணமசாமியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,

 

puthiya tamilkam party leader krushnasamy inteview in admk head office

 

அப்போது பேசிய ஓபிஎஸ், மக்களவை மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

 

அதன்பின் பேசிய கிருஷ்ணசாமி,

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக மற்றும் பாமக உள்ள நிலையில் இந்த கூட்டணியில் புதிய தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. எங்களுக்கு ஒதுக்கப்படும் அந்த ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையத்திடம் தனி சின்னம் கேட்டு வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் எனக்கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்