Skip to main content

ரூ.70 லட்சம் முறைகேடு செய்த ஊராட்சி செயலாளரை கண்டித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்த பொதுமக்கள்...

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

The public who complained to the Collector condemning the Panchayat Secretary who misused Rs. 70 lakhs ...


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது காட்டுசிவிரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்களது ஊரான காட்டுச் சிவிரி ஊராட்சியில், ஊராட்சியின் பொதுநிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி மற்றும் குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ததாக போலியாக பில் தயாரித்து மோசடி செய்து பணம் எடுத்தது 10 ஆண்டுகளாக செயல்படாத ஊர்ப்புற நூலகத்திற்கு செலவு செய்வதாகவும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு கழிவறை கட்டாமலேயே கட்டியதாகவும் எடுத்தது இப்படி ஊராட்சியில் பல்வேறு முறைகேடான வழிகளில் சுமார் 70 லட்சம் ரூபாய் முறைகேடு செய்து பணம் சம்பாதித்துள்ளார் ஊராட்சி செயலாளர் இதற்காக ஊராட்சி செலவினங்கள் செய்ததாக கூறி போலியான பில்களை கடைகளில் வாங்கிக் கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளார். 

 

முறைகேடு  செய்ததற்கான  ஆதாரங்களை 350 பக்கம் ஆவணங்கனுடன் தயார் செய்து ஏற்கனவே அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளோம். அது சம்பந்தமாக, இதுவரை எந்தவிதமான விசாரணையும் செய்யவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுமார் ரூ.70 லட்சம் முறைகேடு செய்து அரசு பணத்தை கையாடல் செய்துள்ள ஊராட்சி செயலாளர் மீதும் அவருக்குத் துணை புரிந்த அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீர் கிணற்றில் மனித கழிவா? விழுப்புரம் ஆட்சியர் விளக்கம்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
as

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணறு ஒன்றில் மனித கழிவு மிதப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பழனி, இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கமளித்துள்ளார்.

அதில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினரை அனுப்பி சம்மந்தப்பட்ட குடிதண்ணீர் கிணற்றைப் பார்வையிட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் கிணற்றில் உள்ள நீரை எடுத்து பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிணற்றில் மிதந்த பொருள் ஒரு தேன் அடை என்பதும் கண்டறியப்பட்டது. பின்பு கிராம மக்கள் முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து தேன் அடை எடுக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக கிணற்றின் மீது இரும்பு கம்பி வேலி அமைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.