Skip to main content

தமிழகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Pragnananda's return to Tamil Nadu received an enthusiastic welcome

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்திய 10வது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற செஸ் டை பிரேக்கர் சுற்றில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்ந்த நிலையில், இரண்டாம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 

இதில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு  பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வந்தன. இந்நிலையில் போட்டிகளை முடித்துக்கொண்டு அஜர்பைஜானின் பாகுவில் இருந்து தற்போது தமிழகம் திரும்பியுள்ளார் பிரக்ஞானந்தா. சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரக்ஞானந்தா தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். 

Next Story

தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்! முதல்வர் பாராட்டு!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Vaishali on becoming the first female Grandmaster from Tamilnadu

 

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராக  தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் செஸ் எல்லோபிரேகாட் ஓபன் போட்டியில் 2 தொடர்  வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். வைஷாலி 2501.5 செஸ் ரேட்டிங் பெற்று பெண்கள் செஸ் தரவரிசைப் பட்டியலில் உலகத்திலேயே 11ஆவது இடத்திலும், இந்திய அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளார். வைஷாலி, பிரபல தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் வைஷாலியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மகத்தான வாழ்த்துக்கள் வைஷாலி, இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்தது. உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தா உடன் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.

 

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடியாக வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். உங்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், உங்கள் குறிப்பிடத்தக்க பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நம் மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.