Published on 06/07/2018 | Edited on 06/07/2018
திருவண்ணாமலை நகரில் இருந்து இடைநில்லா பேருந்துகளை இயக்கி வைக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திருவண்ணாமலை பேருந்து நிலையத்துக்கு வருகை தருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போக்குவரத்து துறையின் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பேருந்து நிலையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மண்டல செயலாளர் சௌந்தர்ராஜன், தொமுசவை சேர்ந்தவர்களுடன் எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே நின்றுக்கொண்டுயிருந்தார். 8 வழிச்சாலைக்காக இடதுசாரிகள் நடத்திய, அரசாணை எரிப்பில் ஈடுப்பட்டவர்களை கைது செய்த போலீஸ்சின் செயல்பாடுகளை பார்த்துக்கொண்டு சாலை ஓரம் மக்களோடு மக்களாக நின்றுக்கொண்டு இருந்தனர்.
அங்குவந்த போலீஸ் டீம், தொமுச சங்கத்தை சேர்ந்த ஒருவரை வாடா என சொல்லியபடி ஒரு இளம் எஸ்.ஐ சட்டையை பிடித்து இழுத்தார். சௌந்தர்ராஜன், எதுக்கு இழுத்துட்டு போறீங்க, விடுங்க என சௌந்தர்ராஜன் கேட்டதும், போ என்று சொல்லியும் போகாமல் போராட்டத்தை வேடிக்கை பார்த்தான் அதுக்காக தான் என அதிகாரத்தோடு சொன்னார்.
வேடிக்கை பார்த்தா கைது பண்ணுவீங்களா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க? என கேட்க பதறியபடி ஓடிவந்த உளவுத்துறை போலீஸார். தொமுச சௌந்தர் உட்பட மற்றவர்களை சமாதானம் செய்து தெரியாமல் செய்துவிட்டார், பெருசு பண்ணாதிங்க விட்டுருங்க என கெஞ்சினர். நகர டி.எஸ்.பி பொறுப்பு ஸ்ரீதர், நீங்க யாருன்னு அவருக்கு தெரியாது விடுங்க என சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். போலீஸ் போலீஸா வேலை பார்க்கனும். அடிமை மாதிரி வேலை பார்க்கக்கூடாது என எகிறியதும் அங்கிருந்து விலகி சென்றனர் போலீஸார்.