Skip to main content

குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு... மருந்தகங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Police warn pharmacies!

 

இளைஞர்கள் போதைக்காக சில மாத்திரைகளை மதுவில் கலந்து குடிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அதுபோன்ற மாத்திரைகளை மருந்தகங்கள், மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னை கிழக்கு மண்டல காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மருந்தகங்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “போதை தரக்கூடிய மாத்திரைகளை மருந்தகங்கள் மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக்கூடாது. அப்படி மருத்துவர்கள் பரிந்துரையின்றி அந்த வகை மாத்திரைகள் தந்தால் அதன் மூலம் நடக்கும் குற்றத்திற்கு மருந்தகங்களே பொறுப்பு” எனக் கூறியுள்ளார்.

 

சமீபத்தில், சர்க்கரை நோய்க்கான மாத்திரையைப் போதைக்காக பயன்படுத்த இளைஞர் ஒருவர் மருந்துக்கடைகளைக் குறிவைத்து திருட்டு செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்