Skip to main content

“இதெல்லாம் ஒரு கம்ப்ளைண்ட்டா?” - அலட்சியப்படுத்திய காவலர்கள் 

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

 police ignored the youth who came to complain in Tenkasi

 

“என்னோட சைக்கிள திருடிட்டாங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தேன். ஆனா, அவங்க இதெல்லாம் ஒரு கேஸான்னு கேக்குறாங்க. ஏன் சைக்கிள் திருடு போனா கேஸ் எடுக்க மாட்டாங்களா?” என போலீஸ் ஸ்டேஷனில் காவலர்கள் அலட்சியமாக பேசியதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ள பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். இவர் சொந்தமாக சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிஷ்குமாரின் வீட்டிலிருந்த சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது, நிதிஷ்குமார் வீட்டிலிருந்த சைக்கிள் மட்டுமின்றி, பாரதியார் நகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில், பகல் நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சைக்கிள்களை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டுச் செல்கிறார். மேலும், இந்தக் காட்சிகள் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமார், இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

 

ஆனால், அந்தப் புகாருக்கு தெளிவான விளக்கம் தராத போலீசார், “இதெல்லாம் ஒரு கம்ப்ளைண்ட்டா சைக்கிள்தான காணாம போச்சு... இதுக்கு நாங்க நடவடிக்கை எடுக்கணுமா?” என அலட்சியமாக பேசியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த நிதிஷ்குமார், போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை தங்களது ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி, நிதிஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என்னோட சைக்கிள திருடிட்டாங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தேன். ஆனா, அவங்க இதெல்லாம் ஒரு கேஸான்னு கேக்குறாங்க. ஏன் சைக்கிள் திருடு போனா கேஸ் எடுக்க மாட்டாங்களா? எனக்கு என்னோட சைக்கிள்தான் அத்தியாவசியமான பொருள். இன்னைக்கு சைக்கிள் காணாம போயிருக்கு. நாளைக்கு என்ன வேணாலும் திருடு போகலாம். ஆனா போலீஸ் இதுலாம் கண்டுக்க மாட்றாங்க” என நிதிஷ்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அலட்சியமாக பதிலளித்த போலீசார் மீது அம்மாவட்ட எஸ்.பி. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.