Skip to main content

இங்கு இன்ஸ்பெக்டர் வேண்டாம் எஸ்.பி.யே சொல்லிவிட்டார் - டார்ச்சர் எஸ்.ஐ..!!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
kkd


"இந்த ஸ்டேஷனிற்கு இன்ஸ்பெக்டர் வேண்டாமென மாவட்ட எஸ்.பி.யே சொல்லிவிட்டார்.! அது போக நான் தான் இங்கு ஸ்டேஷன் ஆபிஸர்.!" என மாவட்ட எஸ்.பி.யின் பெயரைப் பயன்படுத்தி, சக அதிகாரிகளையும், காவலர்களையும் எஸ்.ஐ. ஒருவர் டார்ச்சர் செய்ய, அவர் மீதான புகாரை டி.ஜி.பி.அலுவகத்திற்கு அனுப்பி விட்டு தீர்விற்காகக் காத்திருக்கின்றனர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வடக்கு காவல் நிலைய காக்கிகள்.

காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்புத்தூர், தேவகோட்டை என ஐந்து துணைச்சரகங்களைக் கொண்ட சிவகங்கை மாவட்ட காவல்துறையில் எஸ்.பி.யாகப் பணியாற்றுபவர் ஜெயச்சந்திரன். இதில் 5 பேரூராட்சிகளையும், காரைக்குடி டவுன் பகுதியையும் உள்ளடக்கியது காரைக்குடி காவல்துறை துணைச்சரகம். காரைக்குடி டவுன் பகுதியினைப் பொறுத்தவரை காரைக்குடியில் மட்டும் வடக்கு, தெற்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர்காவல் நிலையம், அழகப்பாபுரம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. ஆரம்பத்தில் காரைக்குடி காவல் துணைச்சரகத்திற்கென அனுமதிக்கப்பட்டப் போலீஸாரின் எண்ணிக்கை 400. எனினும், தற்பொழுது இருப்பது என்னவோ, 250க்கும் குறைவு தான்.

தமிழகத்தில் இருக்கும் முக்கிய காவல் நிலையங்களை எடுத்துக்கொண்டார் காரைக்குடி வடக்குக் காவல் நிலையமே முன்னனியில் இருக்கும். அந்தளவிற்கு க்ரைம் ரேட் இங்கு அதிகம். இந்த போலீஸ் ஸ்டேஷனைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்டப் போலீஸாரின் மொத்த எண்ணிக்கை 80. ஆனால் 49 போலீஸாரே இங்கு இருக்கின்றனர். இரண்டு இன்ஸ்பெக்டர் இருக்க வேண்டிய இந்த போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே இருந்த இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் இடமாற்றம் செய்யப்பட்டு உளவுத்துறைக்கு சென்ற நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஒரு இன்ஸ்பெக்டர் கூட இல்லை என்கின்ற நிலை என்பதால் ஸ்டேஷன் ஆபிஸ்ராக எஸ்.ஐ.ஒருவர் இங்கு வர, அதிலிருந்து அவருக்கும் அங்கிருக்கும் காக்கிகளுக்கும் ஏழாம் பொருத்தமே.!
 

kkd


"இன்ஸ்பெக்டர் யாரும் இல்லாத நிலையில் தான் ஸ்டேஷன் ஆபிஸராக எஸ்.ஐ.அரவிந்தராஜன் இங்குப் பொறுப்பேற்றார். வந்த நாளிலிருந்து இந்த நாள் வரை தினசரி டார்ச்சர் தான். யாராக இருந்தாலும் ஒருமையில் அழைப்பது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு அனைவரையும் வாடா.! போடா.!! தான் கூப்பிடுவார். எதிர்த்தால் வேண்டுமென்றே தொடர்ந்து பெண்டாட்டி, புள்ளைகளை கூட பார்க்க விடாமல் டூட்டி போட்டு கொடுமைப்படுத்துவார். அப்படியும் சகித்துக்கொண்டு வேலை செய்தால் கச்சநத்தம் டூட்டி போட்டுவிடுவேன்." என்பார்.

அது போக, " இந்த ஸ்டேஷனிற்கு இன்ஸ்பெக்டர் வேண்டாமென மாவட்ட எஸ்.பி.யே சொல்லிவிட்டார்.! அது போக நான் தான் இங்கு ஸ்டேஷன் ஆபிஸர்.! இருந்தால் இருங்கள்.! என்கிறார். பணியின் பொழுது எவ்வித விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்." என உறுதி மொழி எடுத்துவிட்டு வந்த அவரே, எங்களிடம் விருப்பு, வெறுப்பினை பயன்படுத்துவது தான் வேதனையே.! இந்த நிலை நீடித்தால் தற்கொலை செய்வதை தவிர வேறுவழியில்லை. அதனால் தான் டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பியுள்ளோம்." என்கின்றனர் புகார் அனுப்பிய காக்கிகள்.

சார்ந்த செய்திகள்