Skip to main content

திருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரியா கைதி மும்பையில் தஞ்சம்! 

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

திருச்சி மத்திய சிறை வளாகத்திலேயே அகதிகள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கான சிறையும் உள்ளது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் குறிப்பாக நைஜீரியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 14 பேர் தண்டனை காலம் முடிவுற்றதையடுத்து விடுதலை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

தற்போது இந்த சிறையில் 40 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் வயது 28 என்பவர் ஏ.டி.எம். கொள்ளை மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். அதன் பிறகும் பல மாதங்களாக சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு கைதியுடன் தகராரு ஏற்பட்டது. அதனால் மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 

 

 Nigerian prisoner who escaped from Trichy jail has sought asylum in Mumbai.

 


அதனை தொடர்ந்து கடந்த 19.07.2019 அன்று சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளை கணக்கெடுத்தனர். அப்போது ஸ்டீபன் மட்டும் மாயமாகி இருந்தார். சிறை வளாகம் முழுவதும் தேடியும் அவரை காணவில்லை. அதன் பிறகு தான் அவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு ஸ்டீபன் எப்படி தப்பினார் என்று விசாரணை நடத்தினார்கள். 

 

 

உடனே, போலீசார் சிறை முழுவதும் சோதனை நடத்திய போது, சிறையில் 25 அடி உயர சுவற்றின் அருகே பெரிய மரம் இருந்துள்ளது. அதில் ஏறிய ஸ்டீபன், மறுபுறம் இருந்த மற்றொரு மரத்தின் மூலம் வெளியே இறங்கி தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் நிஷா, தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டர் ஆகியோர், சிறையில் இருந்த இன்ஸ்பெக்டர் உமா மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

 

 

திருச்சி சிறையில் இருந்து நைஜீரியா நாட்டு கைதி தப்பியது குறித்து சிறை போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஸ்டீபனை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் பெங்களுருக்கு பஸ் மூலம் தப்பி சென்ற தகவல் கிடைத்ததும் அங்கு தனிப்படை விரைந்து சென்று விசாரித்தது. இந்த நிலையில் அங்கிருந்து மும்பைக்கு தப்பி சென்றது தெரிந்ததும் இன்னோரு தனிப்படை தப்பிச்சென்ற நைஜீரியா கைதியை தேடி மும்பைக்கு சென்று உள்ளனர். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்