Skip to main content

 தான் படித்த பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் கொடுமையை கேட்பாரா அமைச்சர் ஜெயக்குமார்!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மடிகணினியை வழங்கினார்.  அதே பள்ளியில் பனி்ரெண்டாம் வகுப்பு பயிலும் ‘ஜி’ வணிகவியல் குரூப்  படிக்கும் 70 மாணவிகளுக்கு மட்டும் மடிகணினி கொடுக்காமல் இருந்துள்ளனர். 

 

ஜ்

இதனை  அப்பள்ளி மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று,  எங்களுக்கு ஏன் கணினி கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளனர். அந்த மாணவர்களிடம் ஆசிரியர்,  உங்க பிரிவு மாணவர்களுக்கு மடிகணினி கிடையாது. நீங்கள் இந்த குரூப் எடுத்துபடிக்கும் போதே இதை சுதாரித்து சேர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பிவைத்துள்ளார். 

 

இதனை அறிந்த மாணவிகள் அமைச்சர் ஜெயகுமார் அவருக்கே தொலைபேசிக்கு தொடர்புகொண்டு புகார் சொல்லியுள்ளனர். ஆனால் அவர் அதை ஒரு விசயமாகவே எடுத்துகொள்ளாமல் அலட்சியப் படுத்தியுள்ளார். 

 

 அந்த பள்ளி தலைமை ஆசிரியர் இன்று மாணவிகளை தனி அறையில் அழைத்து நீங்கள் அமைச்சருக்கே போன் செய்யுறீங்களா? இனி நீங்கள் எப்படி படிக்கமுடியும் என்று மிரட்டியுள்ளார். பிறகு அவர்களிடம்  இதுபோன்று செய்யமாட்டோம் என்று மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர். 

 

மடிகணினி என்பது அனைத்து மாணவர்களுக்கும் தான்.  இந்த பாடப்பிரிவு படித்தால்தான்  உனக்கு மடிகணினி என்பது இல்லை. ஆனால் வருடம் வருடம் இவர்கள் இப்படியேதான் செயகிறார்கள் என்று அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் குற்றம் சுமத்துகின்றனர். 

 

நேற்று நான் படித்தபள்ளி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அமைச்சர் ஜெயகுமார் இந்த பள்ளி மாணவிகளுக்கு என்ன பதில் சொல்லபோகிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

துணி தைத்து கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24)  வடசென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூர் வியாபாரிகள் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அவர், ஓட்டேரியில் உள்ள தையல் கடையில் துணி தைத்துக் கொடுத்து வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார்.