Published on 14/10/2020 | Edited on 14/10/2020

தடுப்பு காவலில் இருந்த மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெகபூபா முப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறேன். காஷ்மீரில் அரசியல் ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிற தலைவர்களையும் விடுவிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயக செயல்முறைகளும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தன் விடுவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ஸ்டாலினுக்கு பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி நன்றி கூறினார்.