Skip to main content

வைரஸ் தாக்குதலில் கேரளாவில் பலர் பலி! தமிழக எல்லையில் மருத்துவ குழு!!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
medical


கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுவரும் சூழலில், தமிழக கேரள எல்லையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிபா வைரஸ் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டுப் பகுதிகளில் மருத்துவக்குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் வாந்தி, மயக்க நிலை, கடும் தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதே இந்த மருத்துவக் குழுவின் நோக்கம்.

’’கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் எல்லையில் இருக்கும் மருத்துவ கண்காணிப்புக் குழுவின் உதவியை நாடலாம். அவர்கள் 24மணி நேர கண்காணிப்பில் இருப்பார்கள். தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுப்பார்கள்.’’ என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிபா வைரஸ் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்மந்தமாக சுகாதாரத்துறை செயலர் தலைமையில், தமிழக கேரள எல்லையோர மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொள்ளும் வீடியோ கண்ப்ரன்ஸிங் கூட்டத்திற்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெடித்த எழுச்சி காரணமாக இந்த வீடியோ கண்ப்ரன்ஸிங் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்