Skip to main content

மாஜி வெங்கடாசலம் நினைவு தினம்..  ஏற்பாடுகள் தீவிரம்...

Published on 06/10/2019 | Edited on 06/10/2019

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். அ.தி.மு.க வில் பலமுறை ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்து ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளிலும் சுயேட்சையாக நின்ற ஆலங்குடியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு அடுத்த தேர்தலில் கட்சி அவருக்கு வாய்ப்பு கொடுத்ததுடன் அமைச்சரவையிலும் இடம் கொடுத்தனர்.

 

 Magi Venkatachalam Memorial Day .. Arrangements for Intensification ...


இந்த நிலையில் கடந்த 2010 அக்டோபர் 7 ந் தேதி மர்ம நபர்களால் அவரது வீட்டில் வைத்தே வெட்டி படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்களால் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல நாட்கள் போக்குவரத்து முடக்கப்பட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளை குருபூஜையாக அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர்கள் வரை கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து கலந்து கொள்வார்கள். கடைவீதிகளை மறைக்கும் அளவிற்கு பதாகைகள் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த வருடம் நீதிமன்ற உத்தரவை மதித்து பதாகைகள் வைக்கவில்லை. அதேபோல நீதிமன்ற உத்தரவை மதித்து மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று விழாக்குழுவினர் மூலம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலிசார் செய்து வருகின்றனர். தமிழக அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்த வருவதால் பொலீசார் குவிக்கப்படுகிறன்றனர்.

 

சார்ந்த செய்திகள்