Published on 22/07/2019 | Edited on 27/07/2019
லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் உள்ளிட்டோரின் ரூபாய் 119.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது மத்திய அமலாக்கத்துறை. கோவையில் உள்ள மார்ட்டினின் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காலி மனைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் முடக்கியதாக மத்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூபாய் 119.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
