Skip to main content

கொழுக்கு மலை தீ விபத்து!  ட்ரெக்கிங் கைடு கைது!

Published on 15/03/2018 | Edited on 15/03/2018
fii

 

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியில்  உள்ள குரங்கனி கொழுக்கு மலை வனப்பகுதியில் பரவிய காட்டு தீயால் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் அந்த  காட்டு தீயில் சிக்கியதில் 12 பேர் உடல் கருகி இறந்தனர். 15-க்கு மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். இந்த நிலையில் தீவிபத்து குறித்து வருவாய் துறை செயலர் அதுல்யா மிஷ்ராவை விசாரனை ஆணையராக இபிஎஸ்., ஒபிஎஸ் அரசு நியமித்து இருக்கிறது.

 

 இந்த தீவிபத்து விசாரணையை வரும் 22 ம்தேதி மிஸ்ரா தொடங்க இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு சுற்றுலா பயணிகள் 12 பேரை ட்ரெக்கிங் கூட்டிகிட்டு வந்த  கைடு பிரபு இந்த தீ விபத்தின் போது  கூட்டிகிட்டு வந்த  சுற்றுலா பயணிகளை பரிதவிக்க விட்டு ஓடிவிட்டார்.  இதுசம்பந்தமாக  குரங்கணி போலீசார் கைடு பிரபு மீது வழக்கு போட்டனர்.  அதன் அடிப்படையில் பிரபுவை  நேற்று இரவு கைது செய்து போடிக்கு கொண்டு வந்தனர். ஆனால் இரவு வெகுநேரம் ஆனதால் நீதிபதியிடம் ஆஜர் படுத்தாமல் இன்று போடி கோர்ட்டில் ஆஜர் படுத்தியதின் மூலம் பிரபுவை 15 நாள் காவலில் வைக்க உத்திரவிட்டார்.  அதைதொடர்ந்து பிரபுவை பெரியகுளம் சிறை சாலையில் போலீசார் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்