Skip to main content

கீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு! கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்!

Published on 20/09/2019 | Edited on 13/12/2019

கீழடி நாகரிகம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என்று தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து சங்க காலம் குறித்த மதிப்பீடுகளிலும் மாற்றம் வரலாம் என்று கருதப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் ஏராளமான தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்தத் தடைகளை எதிர்த்த போராட்டங்கள் காரணமாக இப்போதும் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

keezhadi issue

 

script async='async' src='https://www.googletagservices.com/tag/js/gpt.js'>

முதல்கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்களின் வயது தொடர்பான விவரங்கள் மேலோட்டமாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக நவீன கார்பன் டேட்டிங் முறையில் காலம் அறியப்பட்டுள்ளது. அதன்படி கி.மு. 1 முதல் கி.மு.6 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த நாகரிகம் என்று தெரியவந்துள்ளது.

இதுவரை கீழடி நாகரிகம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்பட்டு வந்தது. இப்போது கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்குச் சொந்தமானது என்று உறுதியாக தெரியவந்துள்ளது. கீழடியில் 353 செண்டி மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட ஆறு மாதிரிப் பொருட்கள் கார்பன் டேட்டிங்கிற்காக அனுப்பப்பட்டதாகவும், அமெரிக்காவில் நடைபெற்ற அந்த ஆய்வில் அந்தப் பொருட்கள் கி.மு.580 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று அறியப்பட்டதாகவும் தொல்லியல்துறை ஆணையர் டி.உதயச்சந்திரன் தெரிவித்தார்.

“கீழடி – வைகை ஆற்றங்கரையில் உருவான சங்க கால நகரமைப்பு” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கங்கை சமெவெளியில் உருவான நாகரிக காலத்தில் வைகைக் கரையிலும் இந்த நாகரிகம் உருவாகி இருக்கிறது.

இதுவரை இந்த அகழ்வாய்வை கீழடி என்று உச்சரித்து வந்த நிலையில் தமிழக அரசு அறிக்கை கீலடி என்று உச்சரித்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

கீழடியில் வாழ்ந்த மக்கள் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே எழுதப்படிக்க தெரிந்திருந்தார்கள் என்பதையும் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அதாவது தமிழ் பிரமி எழுத்துகள் இதுவரை கருதப்பட்ட காலத்தைக் காட்டிலும் பழமையானது என்று தெரியவந்துள்ளது.

அதைவிட, கீழடி நாகரிக மக்கள் விவசாய வேலைகளுக்கு விலங்குகளை பழக்கியிருந்தார்கள் என்பதையும் இந்த அறிக்கை உறுதி செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்